8. பிறருக்கு நன்மை செய்தல் மனதுக்கு ஆறுதல் அளிக்கும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்…

தனக்குள்ளும் மற்றும் தன் பண்புகளில் மாற்றங்களை காண்பதன் மூலமும், அமைதியை கண்டறிவதன் மூலமும், மற்றும் உதவி பெற்ற நபரின் உதடுகளில் உருவாகும் ஒரு புன்னகை படிவத்தை பார்ப்பதன் மூலமும், தர்மத்தால் பயன்பெறும் முதல் நபர் உபகாரர் தான்.

நீங்கள் சிரமத்தில் அல்லது துயரத்தில்  இருந்தால், பிறருக்கு கருணையை காண்பியுங்கள், முதலில் அமைதி மற்றும் ஆறுதல் அடைபவர் நீங்களாக தான் இருப்பீர்கள். தேவைப்படுபவர்களுக்கு கொடுங்கள், ஒடுக்கப்பட்டவர்களை ஆதரியுங்கள், துயரத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள், நோயாளிகளை பார்க்க செல்லுங்கள்: சந்தோஷம் உங்களை அனைத்து திசைகளிருந்தும் சூழ்ந்துகொள்வதை நீங்கள் உணர்வீர்.

ஒரு தர்மத்தின் செயல் வாசனை திரவியம் போல்- உபயோகிப்பவர்க்கும், விற்பவர்க்கும் மற்றும் வாங்குபவருக்கும் இது பயனளிக்கும். மேலும் பிறருக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும் மனோதத்துவ நன்மைகள் உண்மையில் மிக சிறந்தவை. நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் செய்யும் ஒரு தர்மத்தின் செயல், உங்களிடம் உள்ள சிறந்த மருந்தை விட அதிக ஆற்றலுடையதாக இருக்கும்.

மற்றவர்களை சந்திக்கும் போது உங்கள் முகத்தில் படரும் புன்னகையும் ஒரு தருமமே. இறைத்தூதர் ﷺ கூறினார்கள்:

“நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.” (ஏனேன்றால் அந்த செயல் உங்கள் செயல்களுக்காக அளவீட்டில் அதிக எடையுடயதாக இருக்கலாம்)

மறுபுறம், நீங்கள் மற்றவர்களை முகசுளிப்புடன் சந்தித்தால், நீங்கள் பகையின் அறிகுறிகளை காண்பிக்கிரீர்கள். இந்த செயலால் சகோதரத்துவத்துக்கு ஏற்படும் தீங்கு எவ்வளவு என்றால், அதன் தீய விளைவுகள் அல்லாஹ்வுக்கு மட்டும் தெரியும் அளவிற்கு.

ஒரு நாய்க்கு கையளவு நீர் கொடுத்த ஒரு விலைமகளுக்கு, வானம் மற்றும் பூமியின் அளவு பறந்து கிடக்கும் சொர்க்கம், அந்த செயலின் பரிசாக கிடைத்தது என்று இறைத்தூதர் ﷺ தெரிவித்துள்ளார். ஏனென்றால் இந்த பரிசுகளை கொடுப்பவர்,  மன்னிப்பவனாகவும் எவரிடமும் தேவைப்படாதவனாகவும் எல்லா புகழுக்குரியவனும் ஆவான்.

துன்பம், பயம் மற்றும் வருத்தத்தால் மிரண்டுள்ளவர்களே! மற்றவரின் முன்னேற்றத்தில் ஈடுபடுங்கள். வெவ்வேறு வழிகளில் பிறருக்கு உதவி செய்யுங்கள் – அறப்பணி, விருந்தோம்பல், கருணை மற்றும் ஆதரவின் மூலம். மற்றும் அவ்வாறு செய்வதன் மூலம்,நீங்கள் விரும்பும் அனைத்து சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கும்.

“(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும். மாறாக மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.”[திருக்குர்ஆன் 92:18-21].

Advertisements