11.விதி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்…

“பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் – அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.”[திருக்குர்ஆன் 57:22].

    எழுதுகோல் காய்ந்துவிட்டது, தாழ்கள் அகற்றப்பட்டுவிட்டன, நடக்கவிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் முன்கூடியே எழுதி முடிக்கப்பட்டுள்ளது.

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது”[திருக்குர்ஆன் 9:51]

    உங்களுக்கு எது நிகழ்ந்ததோ அதிலிருந்து நீங்கள் தப்பிக்க விதிக்கப்படவில்லை, மற்றும் நீங்கள் எதிலிருந்து தப்பித்தீர்களோ அது உங்களுக்கு நிகழ விதிக்கப்படவில்லை: இந்த நம்பிக்கை உங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டாலே, எல்லா துன்பங்கள் மற்றும்  கஷ்டங்கள் கடினமற்ற, சுகங்களாக  மாறிவிடும். இறைத்தூதர் ﷺ கூறுகிறார்கள்

“எவர் ஒருவருக்கு அல்லாஹ் நன்மை விரும்புகிறானோ, அவரை அவன் துன்பங்களுக்கு உள்ளாக்குவான்.”

  இதன் காரணமாக, உங்களை நோய் தாக்கினாலோ, அன்பானவர்கள் இறந்தாலோ, செல்வதை இழந்தாலோ அதிகமாக கவலைப்படாதீர்கள். இந்த விஷயங்கள் நிகழவேண்டும் என்று அல்லாஹ் விதித்துள்ளான் மற்றும் எல்லா முடிவுகளும் அவன் ஒருவனுடயது மட்டுமே. இந்த நம்பிக்கை நமக்கு இருந்தால், நம் பொறுமைக்கு நல்ல பலன் கிடைக்கும் மற்றும் நம் பாவங்கள் மன்னிக்கப்படும்.

  கஷ்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்திக் காத்திருக்கிறது, அதனால் உங்கள் இறைவனிடம் பொறுமையாகவும், சந்தோஷமாகவும் இருங்கள்.

“அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செயல்கள் பற்றி) கேட்கப்படுவர்.” [திருக்குர்ஆன் 21:23]

அல்லாஹ் எல்லா சம்பவங்களையும் முன்கூடியே விதித்துவிட்டான் என்று நீங்கள் உறுதியாக நம்பாதவரை நீங்கள் நிம்மதியாக இருக்க இயலாது. எழுதுகோல் காய்ந்துவிட்டது மற்றும் உங்களுக்கு நடக்கவிருக்கும் அனைத்து விஷயங்களும் அதிலிருந்து எழுதப்பட்டுள்ளது. அதனால் உங்கள் கையில் இல்லாதவற்றை பற்றி நீங்கள் கவலை படாதீர்கள். வேலி விழுவதை தடுக்கமுடியும் என்றோ, பாய்ந்து ஓடும் தண்ணீரை தடுக்கமுடியும் என்றோ, வீசும் காற்றை நிறுத்தமுடியும் என்றோ இல்லை கண்ணாடி உடைவது தடுக்க முடியும் என்றோ நினைக்காதீர்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை எதையும் நீங்கள் தடுத்திருக்க முடியாது. விதிக்கப்பட்ட அனைத்தும் கண்டிப்பாக நடைபெறும்.

ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்.திருக்குர்ஆன் 18:29]

சரணடைந்துவிடுங்கள். கோபம் மற்றும் வருத்தம் உங்களை மூழ்கடித்துவிடும் முன் விதியை நம்புங்கள். உங்கள் சக்தியில் உள்ளவரை அனைத்தையும் செய்த பிறகும், நீங்கள் எதற்கு எதிராக செயல்பட்டீர்களோ அது நடந்தால், அது நடக்கவேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக நம்புங்கள். நான் இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறாதீர்கள், மாறாக இது அல்லாஹ்வால் விதிக்கப்பட்டுள்ளது, மற்றும் அவன் விருப்பபடி அவன் செய்கிறான்.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.[திருக்குர்ஆன் 94:6]

உணவு பசியை தொடர்கிறது, குடி தாகத்தை தொடர்கிறது, தூக்கம் அமைதியின்மைக்கு பிறகு வரும், மற்றும் ஆரோக்கியம் நோய்க்கு பின்னர் வரும். தொலைந்தவர்கள் வழியை கண்டுகொள்வார்கள், கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைத்துவிடும், மற்றும் பகல் இரவை தொடரும்.த

அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; [திருக்குர்ஆன் 5:52]

மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஊடுருவும் ஒளியுடன் வரும் பகலின் தகவல் இரவிடம் தெரிவியுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒளியின் வேகத்தில் அல்லது கண் சிமிட்டும் நொடியில் வரவிருக்கும் திடீர் நிவாரணத்தின் நற்செய்தி கூறுங்கள்.

மைல்களுக்கு பரந்துகிடக்கும் பாலைவனம் மட்டும் உங்களுக்கு தெரிகின்றது என்றால், அதை தாண்டி ஏராளமான நிழலுடன் பச்சை சோலைகள் காத்திருக்கின்றன என்று அறிந்துகொள்ளுங்கள். இறுக்கி கொண்டே போகும் கயிறு மட்டும் உங்களுக்கு தெரிகின்றது என்றால், அது விரைவில் அறுந்துவிடும் என்று புரிந்துகொள்ளுங்கள்.

கண்ணீரை தொடர்ந்து புன்னகை வரும், பயத்தின் இடத்தில் ஆறுதல் மாற்றப்படும், பதற்றத்துக்கு பதில் அமைதி இடம்மாறும். இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம்  தீக்கிடங்கில் எறியப்பட்டும் வெப்பம் அவரை தாக்கவில்லை, ஏனேன்றால் இறைவனின் உதவி அவருக்கு கிடைத்தது.

“நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். [திருக்குர்ஆன் 21:69]

கடலில் மூஸா அலைஹிஸ் ஸலாம் மூழ்கவில்லை, ஏனேன்றால் அவர்  நம்பிக்கையான, வலுவான மற்றும் உண்மையான முறையில் இதை உச்சரித்தால்.

“ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்.” [திருக்குர்ஆன் 26:62]

நபி முஹம்மது ﷺ அபு பக்ர்(ரலி) விடம் அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று, குகையில் இருக்கும் பொழுது, கூறினார்கள் – பின்னர் அமைதி மற்றும் சாந்தம் அவர்கள் மீது இறங்கியது.

நேரத்தின் அடிமைகள் துயரத்தை மற்றும் துரதிருஷ்டத்தை மட்டுமே காண்கிறார்கள். இது ஏனேன்றால், அவர்கள் அறையின் கதவு மற்றும் சுவர்களை மட்டுமே காண்கிறார்கள், மாறாக அவர்களுக்கு முன் அமைக்கப்பட்ட தடைகளை தாண்டி அவர்கள் பார்க்கவேண்டும்.

எனவே நம்பிக்கையின்மையில் இருக்காதீர்கள் – தருணங்கள் மாறாமல் இருக்க சாத்தியமில்லை. நாட்கள் மற்றும் ஆண்டுகள் ஓடிகொண்டே இருக்கும், எதிர்காலத்தை காண இயலாது, மற்றும் தினமும் அல்லாஹ்விடமமிருந்து வரும் விஷயங்கள் நிறைய உள்ளன. நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் பின்னர் ஒரு புதிய விஷயத்தை அல்லாஹ் அருளுவான். மற்றும் நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

Advertisements