10. மற்றவரின் நகலாக மாறாதீர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்…

உங்கள் பிரத்தியேக குணத்தை இழக்காதீர்கள்: மற்றவரின் நகலாக மாறாதீர்கள். பலர் மற்றவர்களின் வழியை பின்பற்றுவதற்காக தன் சொந்த குரல்கள், தங்களின் அசைவுகளை, தங்களின் தனிமுரண்பாடுகள் மற்றும் தங்களின் பழக்கங்களை மறக்க முயற்சிப்பார். இது போன்ற நடத்தையின் விளைவுகளில் சில போலித்தனம், துக்கம் மற்றும் தன் தனித்தன்மையின் அழிவு.

    ஆதாமிலிருந்து கடைசியாக பிறக்க போகும் குழந்தை வரை யார் இருவரும் ஒரே தோற்றத்தில் இருப்பதில்லை. பிறகு ஏன் அவர்களின் செய்கைகள் மற்றும் அவர்களின் விருப்பு வெறுப்புகள் மட்டும் ஒன்றாக இருக்கவேண்டும்.

    நீங்கள் ஒப்பற்றவர் – உங்களை போல் வேறொருவர் கடந்தகாலத்திலும் இல்லை எதிர்காலத்திலும் இருக்கப் போவதில்லை. நீங்கள் யாரோ X அல்லது Y இருந்து முற்றிலும் மாறுபட்டவர், அதனால் மற்றவரை குருட்டுத்தனமாக பின்பற்றுவதை உங்கள் மேல் கட்டாயபடுத்திக் கொள்ளாதீர்.

   உங்கள் சொந்த இயல்பு மற்றும் இயற்கை பண்புகளை கொண்டு முன்னோக்கி செல்லுங்கள்.

“ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்;”

[திருக்குர்ஆன் 2:60]

“ஓவ்வொரு கூட்டத்தவருக்கும், ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்;”

[திருக்குர்ஆன் 2:148]

     நீங்கள் எப்படி படைக்கப்பட்டீரோ அப்படியே இருங்கள் மற்றும் உங்கள் குரலை மாற்றவோ அல்லது உங்கள் நடையை திருத்தவோ முயற்சிக்காதீர்கள். இறைஅருளில் உள்ளதை பின்பற்றி உங்கள் ஆளுமையை வளர்த்திடுங்கள், மற்றவரை பின்பற்றி மற்றும் உங்கள் தனித்தன்மையை இழந்து உங்கள் வாழ்வை மதிப்பில்லாத ஒன்றாக மாற்றாதீர்கள்.

    உங்கள் விருப்பு வெறுப்புகள் உங்களுக்கே பிரத்யேகமானவை மற்றும் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், ஏனெனில் நீங்கள் அப்படிதான் படைக்கபட்டீர் மற்றும் உங்கள் குணமும் அப்படிதான். இறைத்தூதர் ﷺ கூறுகிறார்கள் “மற்றும் உங்களில் யாரும் மற்றவறை பின்பற்றுபவரக இருக்காதீர்கள்.”

     பண்புகளின் அடிப்படையில், மக்கள், மரங்கள் மற்றும் தாவரங்களின் உலகத்தை போல்: இனிப்பு மற்றும் புளிப்பு, உயரமான மற்றும் குறுகிய, முதலியன. உங்கள் அழகு மற்றும் மதிப்பு, உங்கள் இயற்கை நிலையை பாதுகாப்பதில் உள்ளது. நம்முடைய பல்வேறு நிறங்கள், மொழிகள், திறமைகள் மற்றும் திறன்கள், எல்லாம் வள்ள, அளவற்ற அருளாளன், நம்மை படைத்தவனிடம் இருந்து அத்தாட்சிகள் ஆகும், அதனால் அவற்றை மறுக்காதீர்கள்.

Advertisements