9.வேலை செய்து சலிப்பை விலக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்…

வாழ்க்கையில் செய்வதற்கேதுமில்லாத மக்கள்தான் வதந்திகளையும் பொய்மையையும் பரப்புவதில் அதிக நேரம் கழிப்பவர்கள், ஏனென்றால் அவர்கள் மனதில் நன்மை பயக்கும் எண்ணங்கள் இருப்பதில்லை.

“ பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.”[ திருக்குர்ஆன் 9:87]

     ஒன்றும் செய்யாமல் நீங்கள் இருக்கும்போது, மனஅழுத்தத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும் தயாராகுங்கள், ஏனெனில் செயலின்றி இருக்கும் போது உங்கள் மனம் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும், அதன் சிக்கல்களிலும் திரியும். எனவே உங்களுக்கு என் நேர்மையான ஆலோசனை என்னவென்றால் ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட பயனுள்ள செயல்களை செய்யுங்கள், ஏனென்றால் செயலின்மை ஒரு மெதுவான மற்றும் மறைமுகமான தற்கொலை.

       ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது சீனாவில் உள்ள கைதிகளுக்கு அணுஅணுவாக கொடுக்கப்படும் சித்திரவதை போல்: ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சொட்டும் குழாய்க்கு அடியில் அவர்கள் வைக்கபடுகின்றனர். துளிகளுக்கு இடையே காத்திருக்கும் நேரத்தில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடுகின்றனர்.

      செயல்விருப்பமின்மை என்பது ஒருவரின் கடமைகளை புறக்கணிப்பது என்று அர்த்தம். செயலின்மை ஒரு கைதேர்ந்த திருடன்,அதன் இரை உங்கள் மனது தான்.

       எனவே இப்பொழுதே எழுந்து ஒரு பிராத்தனை செய்யுங்கள் அல்லது புத்தகம் வாசியுங்கள்; கடவுளை போற்றுங்கள், படியுங்கள், எழுதுங்கள், உங்கள் நூலகத்தை ஒழுங்குபடுத்துங்கள், உங்கள் வீட்டில் எதையாவது சரி செய்யுங்கள் அல்லது உங்கள் செயலின்மைக்கு ஒரு முடிவு கட்டும் வகையில் பிறருக்கு உதவுங்கள். உங்கள் நன்மையை மனதால் விரும்புவதால் தான் நான் இதை சொல்கிறேன்.

      வேலை செய்து சலிப்பை அழித்துவிடுங்கள். இந்த எளிய கட்டளையை பின்பற்றினாலே, சந்தோஷத்தை நோக்கி செல்லும் பாதையை ஐம்பது சதவிகிதம் கடந்துவிடுவீர்கள். விவசாயிகள், தச்சர்கள் மற்றும் ரொட்டி தயாரிப்பவர்களை கவனியுங்கள், மனநிறைவுடன் இருப்பதால், எப்படி பறவைகள் பாடுவது போன்ற இனிமையான சொற்களை உச்சரித்தபடியே வேலை செய்கின்றனர் என்று. பிறகு உங்களை கவனியுங்கள், கண்ணீரை துடைத்தபடி உங்கள் படுக்கையில் புறண்டு புறண்டு படுத்து, எப்போதும் துக்ககரமாக, எப்போதும் உங்களை கொடுமைப்படுத்திகொன்டே எப்படி இருக்கிறீர்கள் என்று.

Advertisements